இந்தியாவின் முதல் கனரகப் பளுதூக்கும் ஆளில்லா விமானம்
April 29 , 2023 1008 days 537 0
மாநிலத்தின் இவ்வகையிலான முதலாவது தளவாடங்களுக்கான கனரகப் பளுதூக்கும் ஆளில்லா விமானத்தினை ஒடிசா மாநில முதல்வர் அறிமுகம் செய்தார்.
இது ஒடிசாவில் நிறுவப் பட்டுள்ள ‘BonV ஏரோ’ எனப்படுகின்ற ஒரு புத்தொழில் நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டது.
இது 50 கிலோ எடையினை 10 கி.மீ. தொலைவு வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இந்தப் புத்தொழில் நிறுவனமானது அதன் அடுத்த கட்ட மேம்பாட்டில், 200 கிலோகிராம் சரக்குகளை 40 கிலோமீட்டருக்கு மேலான தொலைவு வரை கொண்டு செல்லும் திறன் கொண்ட ‘RM002’ எனப்படும் அதன் முதன்மை வாகனத்தினை உருவாக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.