இந்திய அரசானது, முதல் விரிவான சுரங்கக் கழிவுகள் கொள்கையை அறிவித்தது.
தாதுக்களிலிருந்து கனிமங்கள் பிரித்தெடுக்கப்பட்ட பிறகு எஞ்சியிருக்கும் கழிவுப் பொருட்கள் சுரங்கக் கழிவுகள் ஆகும்.
இந்தக் கொள்கை, சுரங்கக் கழிவுகள், சுரங்கக் கழிவு சேமிப்புக் குளங்கள், கசடுகள் மற்றும் தொழில்துறை எச்சங்களிலிருந்து லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் அருமண் கூறுகள் போன்ற முக்கியமான மற்றும் மூலோபாய தாதுக்களை மீட்டெடுக்க அனுமதிக்கிறது.
இந்தியச் சுரங்க வாரியம் (IBM), மத்திய சுரங்கத் திட்டமிடல் & வடிவமைப்பு நிறுவனம் (CMPDI), மற்றும் அணு கனிம இயக்குநரகம் (AMD) ஆகியவை இந்தப் பொருட்களை ஆராய்ந்து மதிப்பிடும்.
செலினியம், டெலூரியம், மாலிப்டினம், ஜெர்மானியம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பல துணை தாதுக்கள் முதன்மை தாதுக்களுடன் உள்ளன.
இந்தக் கொள்கை இறக்குமதி சார்புநிலையைக் குறைத்தல், தன்னம்பிக்கையை மேம்படுத்துதல் மற்றும் மின்கலங்கள், சூரிய மின் உற்பத்தித் தகடுகள் மற்றும் காற்றாலை விசையாழிகள் போன்ற பசுமைத் தொழில்நுட்பங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.