இந்தியாவின் முதல் கால்கள் கொண்ட இடம் பெயரும் இயந்திரம் – SCORP
January 17 , 2026 5 days 50 0
SCORP எனும் இயந்திரத்தினை கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் காப்பு நிறுவனமான xTerra Robotics நிறுவனம் உருவாக்கியது.
கால்களைக் கொண்ட நடமாடும் மேனிபுலேட்டர் என்பது நடக்கும் கால்கள் கொண்ட ஒரு தானியங்கு /ரோபோ கையுடன் கூடிய ஒரு ரோபோ ஆகும்.
SCORP படிக்கட்டுகள், இடிபாடுகள், சரிவுகள் மற்றும் சீரற்ற மேற்பரப்புகளில் இயங்கக் கூடியது என்பதோடுமேலும் பொருட்களை எடுத்துக் கொண்டு இயங்கும் திறன் உடையதாகும்.
இது தொழில்துறை ஆய்வு, பேரிடர் மீட்பு, பாதுகாப்பு மற்றும் ஆபத்தானச் சூழல்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.