TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கிராபீன் கொள்கை

February 23 , 2026 19 hrs 0 min 6 0
  • கிராபீனின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்தியாவின் முதல் விரிவான கிராபீன் கொள்கையை கேரளா அங்கீகரித்துள்ளது.
  • கிராபீன் என்பது ஒரு அறுகோண பின்னலில் அமைக்கப்பட்ட கார்பன் அணுக்களின் ஒற்றை அடுக்கு ஆகும் என்பதோடு மேலும் அதன் அதிக வலிமை, மின் கடத்துத்திறன் மற்றும் வெப்ப நிலைத்தன்மைக்கு பெயர் பெற்றது.
  • இந்தக் கொள்கையானது பாலக்காட்டில் ஒரு பிரத்தியேக கிராஃபீன் தொழில்துறை பூங்காவையும், ₹200 கோடி முதலீட்டில் ஒரு டிஜிட்டல் புத்தாக்க மையத்தையும் முன் மொழிகிறது.
  • கிராபீன் அடிப்படையிலான கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியை ஆதரிப்பதற்காக கிராபீன் பூங்காவை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
  • அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பூங்காக்களில் உற்பத்தி அலகுகளுக்கான குத்தகைக் பண வழங்கீடுகளில் கேரளா 50% மானியத்தை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்