திட்டமிடப்பட்ட நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் சூரத் இந்தியாவின் முதல் முழுமையான குடிசைப் பகுதி இல்லாத நகரமாக மாற உள்ளது.
சூரத் மாநகராட்சிக் கழகம் (SMC) குடிசைப் பகுதிகளை நிரந்தரக் குடியிருப்பு கட்டிடங்களாக மாற்றுவதன் மூலம் அப்பகுதி சார் மறுமேம்பாட்டில் கவனம் செலுத்தி யுள்ளது.
தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) முக்கியப் பங்கு வகித்துள்ளது.
பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அடிப்படைக் குடிமை வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளுக்கு மாற்றப் பட்டுள்ளனர்.
குஜராத்தில் சூரத் ஒரு முக்கிய ஜவுளி மற்றும் வைர செயலாக்க மையமாகும் என்ற நிலையில்இது ஒவ்வோர் ஆண்டும் மிக அதிக எண்ணிக்கையிலானப் புலம்பெயர்ந்த மக்களை ஈர்க்கிறது.