இந்தியாவின் முதல் குளிர்வூட்டல் கூரை அமைப்புக் கொள்கை
April 11 , 2023 826 days 474 0
ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகியவை இணைந்து 2023-2028 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் குளிர்வூட்டல் கூரை அமைப்புக் கொள்கையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தக் கொள்கையானது, சூரிய ஒளிப் பிரதிபலிப்பினை ஏற்படுத்தும் வண்ணப் பூச்சுகள், ஓடுகள் அல்லது தாள்கள் போன்ற குளிர்வூட்டும் கூரைப் அமைப்புகளை நிறுவுவதைக் கட்டாயமாக்குவதன் மூலம், மாநிலம் முழுவதும் குளிர்வூட்டல் சார்ந்தக் கூரை அமைப்புகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
300 சதுர கிலோமீட்டர் கூரைப் பரப்பில் (முக்கியமாக - 200 சதுர கிமீ), தூய்மையான ஒரு கூரை அமைப்புத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும் ஒரு இலக்கை அடையச் செய்வதற்காக இந்தக் கொள்கையானது திட்டமிடப்பட்டுள்ளது.