இந்தியாவின் முதல் சதுப்புநில மறுசீரமைப்புத் தரநிலைகள் - BIS
July 25 , 2026 3 days 54 0
இந்திய தர நிர்ணய அமைப்பானது (BIS) சதுப்புநில சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்கான இந்தியாவின் முதல் தேசிய வழிகாட்டுதல்களைத் தயாரித்து வருகிறது.
"சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு — வழிகாட்டுதல்கள்" என்ற தலைப்பிலான வரைவுத் தரநிலை, இந்தியா முழுவதும் சதுப்புநில மறு சீரமைப்புக்கான சீரான நடைமுறைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
அறிவியல் பூர்வமான நடவு முறைகள், பல்லுயிர் பாதுகாப்பு, மக்கள் பங்கேற்பு மற்றும் சதுப்புநில வாழ்விடங்களின் நிலையான மறுசீரமைப்பு ஆகியவற்றில் இந்த வழி காட்டுதல்கள் கவனம் செலுத்துகின்றன.
சதுப்புநில மரக்கன்றுகளை நடுவதற்கு நெகிழிப் பைகளுக்குப் பதிலாக மக்கும் பைகளைப் பயன்படுத்துதல் மற்றும் வாழ்வாதார விருப்பங்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பங்குதாரர்களின் ஆலோசனைகளை BIS பெற்றுள்ளது.
பொருத்தமான இடங்களில் சரியான மர வகைகளை நடுவது சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் கடல் பல்லுயிர்களுக்கு ஆதரவளிக்கிறது என்பதை இத்தரநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.