இந்தியாவின் முதல் சிறிய வகை ஆளில்லா விமானம் என்ற சான்றிதழை அஸ்டீரியா ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்ற நிறுவனம் பெற்றுள்ளது.
இது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட A200 வகை என்ற ஆளில்லா விமானத்திற்குச் சான்றளிக்கப் பட்டது.
"புவியியல் தகவல் அமைப்பு, விவசாயம், கட்டுமானம், சுரங்கம் மற்றும் பிற தொழில்களில் ஆய்வு மற்றும் வரைபடமிடல் போன்றப் பயன்பாடுகளுக்காக இந்த வகை ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டுள்ளது."
250 கிராம் முதல் அதிகபட்சமாக இரண்டு கிலோ வரை எடை கொண்ட ஆளில்லா விமானங்கள் சிறிய வகை ஆளில்லா விமான வகையின் கீழ் வருகின்றன.