TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சேவை உற்பத்தி குறியீடு சோதனை

July 18 , 2026 9 days 100 0
  • முறையான சேவைத் துறையின் மாதாந்திர செயல்பாடுகளை அளவிடுவதற்காக, வேண்டி புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) இந்தியாவின் முதல் சோதனைமுறை சேவை உற்பத்தி குறியீட்டை (ISP) வெளியிட்டுள்ளது.
  • முதல் ISP ஆனது 2024-25-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு 19 துணைத் துறைகளை உள்ளடக்கியது மற்றும் இது இந்தியாவின் சேவைத் துறையில் சுமார் 60%-ஐப் பிரதிபலிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 14 துணைத் துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன என்பதோடு இது சேவைத் துறையின் வலுவான செயல் திறனைக் காட்டுகிறது.
  • இந்தக் குறியீடு, சேவை உற்பத்தி குறியீட்டிற்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (TAC-ISP) வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவின் சேவைப் பொருளாதாரத்தில் ஏற்படும் குறுகிய கால மாற்றங்களைக் கண்காணிக்கவும் மற்றும் மேக்ரோ பொருளாதாரக் குறிகாட்டிகளை வலுப்படுத்தவும் ISP மாதாந்திர அடிப்படையில் வெளியிடப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்