இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் அகலப்பட்டை சேவை
July 9 , 2025 9 days 51 0
ஐதராபாத்தில் உள்ள அனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனமானது, இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் அகலப்பட்டை சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தச் சேவையானது, 2028 ஆம் ஆண்டிற்குள் ஒரு புவிநிலைச் சுற்றுப்பாதை (GEO) தொடர்பு செயற்கைக் கோளுடன் தொடங்கும்.
இந்தச்செயற்கைக்கோள் ஆனது வினாடிக்கு 100 ஜிகாபிட்கள் (Gbps) வரையிலான தரவு வேகத்தை வழங்கும்.
GEO செயற்கைக்கோள்கள் ஆனது பூமியிலிருந்து 35,000 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் நன்கு நிலை நிறுத்தப்பட்டு, ஒரு செயற்கைக்கோள் மூலம் பெரியப் பகுதிகளுக்கு இணைப்பினை அளிக்கும்.