TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் திறன்மிகு கிராமம்

August 13 , 2025 16 hrs 0 min 41 0
  • மகாராஷ்டிராவின் கிராமப்புற நாக்பூரில் 1,800 குடியிருப்பாளர்களைக் கொண்ட சத்னாவ்ரி, ஒரு சோதனைத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் திறன்மிகு நுண்ணறிவு கிராமமாக மாற உள்ளது.
  • இந்த திட்டமானது ஆளில்லா வான்வழி வாகனங்களின் உதவியுடன் வேளாண்மை, திறன் மிகு நீர்ப்பாசனம், நடமாடும் வங்கி, எண்ணிம முறைகள் வழியான பள்ளிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது.
  • இந்த சோதனைத் திட்டமானது, முழுமையான கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலான மண் பரிசோதனை மற்றும் அங்கன்வாடிக்கான எண்ணிமத் தீர்வுகள் போன்ற எண்ணிமக் காரணிகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்