தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) குடும்ப வருமானம் மற்றும் பெருநிறுவனச் சேவைகள் குறித்த இந்தியாவின் முதல் நாடு தழுவிய ஆய்வுகளுக்குத் தயாராகி வருகிறது.
இந்த ஆய்வுகளில் தேசிய குடும்ப வருமான ஆய்வு (NHIS) மற்றும் பதிவு செய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு (ASISSE) ஆகியவை அடங்கும்.
ஏப்ரல் 2026ல் களப்பணியைத் தொடங்கும் இந்த இரண்டு ஆய்வுகளும் முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படும்.
NHIS ஆனது குடும்ப வருமானப் பங்கீடு, வாழ்க்கை நிலைமைகள், உழைப்பு, மூலதனம் மற்றும் நிலம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் குறித்த தரவுகளைச் சேகரித்து, கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதாரப் பகுப்பாய்விற்கு ஆதரவு அளிக்கிறது.
ASISSE ஆனது, சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பு (GSTN) கட்டமைப்பைப் பயன்படுத்தி, ஒருங்கிணைக்கப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களில் கவனம் செலுத்தி, மொத்த மதிப்புக் கூட்டல், மூலதன உருவாக்கம், வேலைவாய்ப்பு மற்றும் ஊதியங்கள் போன்றவற்றைச் சேகரிக்கிறது.