இந்தியாவின் முதல் நகர்ப்புற இரவு நேர சுற்றுலாப் பூங்கா
January 9 , 2026 3 days 52 0
லக்னோ நகரின் வடக்குப் புறநகரில் உள்ள குக்ரெயில் வனப்பகுதியில் இந்தியாவின் முதல் நகர்ப்புற இரவு சுற்றுலா வசதி/சஃபாரி நிறுவப்பட உள்ளது.
இந்த இரவு நேர சஃபாரி உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகர எல்லைக்குள் கட்டுப்படுத்தப் பட்ட இரவு நேர வனவிலங்குப் பார்வை அனுபவமாக இருக்கும்.
இது சிங்கப்பூர் இரவு நேர சஃபாரி மாதிரியால் ஈர்க்கப்பட்டு, இருள் நேரத்தில் வன விலங்குகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்க கட்டுப்படுத்தப் பட்ட இயக்கம் மற்றும் குறைந்த செறிவுடைய விளக்குகள் கொண்ட இரவு நேர சஃபாரி பாதைகள் அடங்கும்.
இந்த மேம்பாடு குக்ரெயில் வனப்பகுதிக்குள் இருக்கும் முதலை, கங்கை நீர்முதலை மற்றும் ஆமை வளங்காப்பு மையங்களில் வசதிகளை மேம்படுத்தும்.
உள்கட்டமைப்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதைகள், மூங்கில் குடிசைகள், இயற்கை வழியான நடைப்பயணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார் சுற்றுலா மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிக்க வேண்டி வழிகாட்டப்பட்ட கல்வித் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.