TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நகர்ப்புறப் பருவநிலை நிகழ்வு

January 26 , 2026 14 hrs 0 min 18 0
  • மும்பை நகரானது, பிப்ரவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை இந்தியாவின் முதல் நகர நிர்வாகத் தலைமையிலான பருவநிலை நடவடிக்கை முன்னெடுப்பான 2026 ஆம் ஆண்டு மும்பை பருவநிலை வாரம் என்ற கொண்டாட்டத்தினை நடத்த உள்ளது.
  • பருவநிலை நடவடிக்கைகளை குழந்தை உரிமைகளுடன் இணைப்பதுடன், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்டு குடிமக்களால் இயக்கப் படும் பருவநிலை தீர்வுகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் ஆகும்.
  • யுனிசெஃப் இந்தியா மற்றும் YuWaah ஆகியவை இளைஞர்களை பருவநிலைக் கொள்கை மற்றும் செயல்பாட்டில் ஈடுபடுத்தும்.
  • கல்லூரி மாணவர்களை அணி திரட்டவும், LiFE திட்டத்தின் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) கீழ் மின்னணு கழிவு மேலாண்மையை முன்னிலைப்படுத்தவும் பிப்ரவரி 9 முதல் 16 வரை வளாக ரீதியான பருவநிலை சாலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • 16–24 வயதுடைய புதுமைப்பித்தர்கள் உணவு அமைப்புகள், நகர்ப்புற மீள்தன்மை மற்றும் ஆற்றல் மாற்றம் குறித்தத் தீர்வுகளை முன்வைக்க ஒரு இளைஞர் பசுமை புத்தாக்கச் சவால் அனுமதிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்