இந்தியாவின் முதல் நீருக்கடியில் இயங்கும் வணிக ஆளில்லா விமானம் - ஐரோவ் துனா
September 15 , 2018 2506 days 802 0
கொச்சியை மையமாகக் கொண்ட தொடக்க நிலை நிறுவனமான IROV டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (EyeROV) என்ற நிறுவனமானது நீருக்கடியில் இயங்கும் ஆளில்லா விமானத்தை வணிக ரீதியில் களமிறக்கியுள்ளது.
DRDO-வின் கடற்படை மற்றும் கடற்பரப்பியல் ஆய்வகத்திற்கு (NPOL - Naval Physical and Oceanographic Laboratory) முதல் வாகனத்தை IROV ஆனது ஒப்படைத்தது.
ஐரோவ் துனா ஆனது செயல்திறன்மிக்க நுண்ணிய தொலை தூரத்திலிருந்து இயங்கக்கூடிய அல்லது நீருக்கடியில் இயங்கக்கூடிய ஆளில்லா விமானமாகும். இது உலகளாவிய தரத்திற்கு இணையானதாகவும், நீருக்கடியில் கடுமையான மற்றும் சிக்கலான பணிகளை மேற்கொள்ளும் செயல்பாட்டுத் திறனையுடையதாகவும் உள்ளது.
இந்த விமானமானது நீருக்கடியில் உள்ள கப்பல் பாகங்கள், மீன் பண்ணைகள், அணைகள், துறைமுகக் கட்டமைப்புகள் மற்றும் பாலத்தின் அடித்தளங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.