அசாம் மாநில முதல்வர் கௌஹாத்திக்கு அருகிலுள்ள சோனாப்பூரில் நாட்டின் முதல் நீர் சார் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைத்தார்.
அசாமில் பல ஆறுகள் இருந்தாலும், அதன் மீன் வளத் தேவையைப் பூர்த்தி செய்ய என ஆந்திரப் பிரதேசம் போன்று பிற மாநிலங்களையே இன்றும் சார்ந்துள்ளது.
அசாம் மாநிலம் அதன் மீன் உற்பத்தியை சுமார் 4.99 லட்சம் மெட்ரிக் டன்களாக இரட்டிப்பாக்கி, இந்தியாவில் நான்காவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் மாநிலமாக மாறியது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஆனது இந்தியாவில் மிகப்பெரிய மீன் உற்பத்தி செய்யும் மாநிலமாக உருவெடுத்தது.
2024 ஆம் ஆண்டில், மீன் உற்பத்தியில் ஆந்திரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மேற்கு வங்காளம், குஜராத் மற்றும் கேரளா ஆகியவை இடம் பெற்றுள்ளன.