கார்பன் மதிப்பு உருவாக்கம் மற்றும் விற்பனையாளர் நிறுவனமான EKI எனர்ஜி சர்வீசஸ் உலகளாவிய அங்கீகாரத் தரத்தின் கீழ் இந்திய நெகிழித் திட்டத்தைப் பட்டியலிட்ட முதல் நிறுவனமாகத் தன்னை அறிவித்தது.
எனவே, இந்த நிறுவனம் இந்தியாவின் முதல் சர்வதேச நெகிழி மதிப்புகளை உருவாக்கும் குறிக்கோளுடன் இந்தியா சார்பாக ஒரு நெகிழித் திட்டத்தைப் பட்டியலிட்ட முதல் நிறுவனம் என்ற பெருமையினைப் பெற்றது.
EKI எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்தின் இந்தத் திட்டமானது, நெகிழிக் கழிவுகள், முதன்மையாக பாலி எத்திலீன் டெரெப்தாலேட் (PET) கழிவுகள், பாலி எத்திலீன் டெரெப்தாலேட் படிவுகள் மற்றும் சில்லுகள் ஆகியவை முறையாகப் பெறப்பட்டு மறு சுழற்சி செய்யப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் அடிப்படை இழையாக (RPSF) மாற்றப் படுவதை உறுதி செய்கிறது.
பாலிஎஸ்டர் அடிப்படை இழையானது பின்னர் ஜவுளித் தொழிலில் ஆடை மற்றும் நூல் இழைகளால் செய்யப்பட்டப் பிற பயன்பாட்டுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப் படலாம்.