December 18 , 2025
15 hrs 0 min
23
- பக்கவாத சிகிச்சைக்காக புது டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனை இந்தியாவில் முதல் முறையாக சூப்பர்நோவா ஸ்டெண்டின் மருத்துவ பரிசோதனையை நடத்தியது.
- சூப்பர்நோவா ஸ்டென்ட் என்பது இந்தியாவின் பல்வேறு நோயாளிகளுக்காக என்று வடிவமைக்கப் பட்ட ஒரு புதிய மற்றும் மேம்பட்ட பக்கவாத சிகிச்சை சாதனமாகும்.
- இந்தியாவில் பக்கவாதம் ஆனது பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை விட இளம் வயதிலேயே ஏற்படுவதால், இந்த சாதனம் இந்திய நோயாளிகளுக்கு ஏற்றது.
- இது உள்நாட்டு மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பக்கவாத சிகிச்சை சாதனம் ஆகும்.
- தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள இந்த சாதனம், ஒவ்வோர் ஆண்டும் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கவாத நோயாளிகளுக்குப் பயனளிக்கும்.

Post Views:
23