TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பசுமை மெத்தனால் ஆலை

May 5 , 2026 15 hrs 0 min 39 0
  • இந்தியாவின் முதல் பசுமை மெத்தனால் உற்பத்தி ஆலையானது குஜராத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
  • குஜராத்தில் உள்ள இந்த ஆலையானது, பெருங்கடல்களில் செல்லும் கப்பல்களுக்கான கடல் எரிபொருளை உற்பத்தி செய்வதற்கு, ஊடுருவும் புதர் செடியான புரோசோபிஸ் ஜூலிஃப்ளோராவை (கச்சில் உள்ளூரில் காண்டோ பவால் என்று அழைக்கப்படுகிறது) மூலப்பொருளாகப் பயன்படுத்தும்.
  • உயிரிபொருளை மெத்தனாலாக மாற்றும் வாயுவாக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீனதயாள் துறைமுக ஆணையத்தில் இது உருவாக்கப்பட்டு வருகிறது.
  • இது உயிரிபொருளை செயற்கை வாயுவாகவும் (syngas), பின்னர் மெத்தனால் எரிபொருளாகவும் மாற்ற வாயுவாக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.
  • இந்த ஆலை எதிர்கால விரிவாக்கத் திட்டங்களுடன், நாள் ஒன்றுக்கு சுமார் 5 டன்கள் என்ற ஆரம்பக் கொள்ளளவைக் கொண்டுள்ளது.
  • பசுமை மெத்தனால் என்பது கடல்வழி கப்பல் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் குறைந்த கார்பன் கொண்ட, புதுப்பிக்கத்தக்க எரிபொருளாகும், மேலும் இது பசுமைக் குடில் வாயு உமிழ்வைக் குறைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்