ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள மலைக் கிராமமான கயாவில் எல்லைப்புற சாலை அமைப்பானது இந்தியாவின் முதலாவது பனிக்கட்டியாலான தேநீர் விடுதியை உருவாக்கியுள்ளது.
இது புகழ்பெற்ற மணாலி-லே நெடுஞ்சாலையில் கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
புத்த சமய தியான மண்டபங்களின் அமைப்பை ஒத்த இந்த பனிச் சிற்பமானது இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டது.