TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பாசி மரம்

May 25 , 2026 14 hrs 0 min 34 0
  • காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவும் இந்தியாவின் முதல் சூரிய சக்தியால் இயங்கும் "பாசி மரம்" (Algae Tree) போபாலில் நிறுவப்பட்டுள்ளது.
  • இந்த பாசி மரம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சுவாமி விவேகானந்தர் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது.
  • இந்தச் சாதனம் நுண்பாசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
  • ஒரு பாசி மரம், கிட்டத்தட்ட 25 முதிர்ந்த மரங்களுக்கு இணையான கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறன் கொண்டது.
  • இந்த அமைப்பு 15 மீட்டர் சுற்றளவிற்குள் PM2.5 காற்று மாசுபடுத்திகளை சுமார் 45-55% வரை குறைக்கக் கூடியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்