TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் புல்வெளிகள் வழிகாட்டி

August 21 , 2026 3 days 86 0
  • மங்கோலியாவின் உலான்பாத்தாரில் நடைபெற்ற பாலைவனமாதலை எதிர்ப்பதற்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் (UNCCD) COP17 மாநாட்டில், 'இந்தியாவின் புல்வெளிகள் மற்றும் பிற திறந்தவெளி இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கான வழிகாட்டி' முதன்முறையாக வெளியிடப்பட்டது.
  • இந்த வழிகாட்டி இந்தியாவின் புல்வெளிகள், சவானாக்கள், பாலைவனங்கள் மற்றும் பிற திறந்தவெளி இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கியது.
  • இதில் அவற்றின் புவியியல், சூழலியல், பல்லுயிர் மற்றும் தொடர்புடைய சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.
  • காடுகளுடன் சேர்த்து இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்த வழிகாட்டி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • இது கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பாதுகாப்பு அமைப்புகள், மேம்பாட்டு முகமைகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்