TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி

August 22 , 2021 1456 days 1491 0
  • இந்தியத் தலைமை நீதிபதி N.V. ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற நியமனக் குழுவானது (கொலீஜியம்) உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு வேண்டி மூன்று பெண் நீதிபதிகள் உள்ளிட்ட 9 நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளது.
  • உச்சநீதிமன்ற நியமனக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 3 பெண் நீதிபதிகள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி B.V. நாகரத்னா, தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஹீமா கோஹ்லி மற்றும் குஜராத் உயர்நீதிமன்றத்தின்  நீதிபதி பெலா M. திரிவேதி ஆகியோர் ஆவர்.
  • உச்சநீதிமன்ற நியமனக் குழுவின் பரிந்துரையானது மத்திய அரசினால் பரிசீலிக்கப் பட்டால், இந்த மூன்று பெண் நீதிபதிகளுள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி B.V. நாகரத்னா அவர்கள், 2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்