இந்தியாவின் முதல் பேரழிவுகளுக்கான கடலோர தானியங்கி எச்சரிக்கை அமைப்பு
January 20 , 2018 2925 days 1109 0
இந்தியாவின் முதல் தானியங்கி முன்கூட்டிய எச்சரிக்கை பரப்புதல் அமைப்பு, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒடிசாவில் நிறுவப்பட இருக்கிறது.
முன் கூட்டிய எச்சரிக்கை பரப்புதல் அமைப்பு, நாட்டில் முதன் முறையாக தானியங்கி முறையில் பொதுமக்களுக்கு எச்சரிக்கைச் செய்திகள் பரப்பும் அமைப்பாகும்.
இந்த அமைப்பு ஒடிசாவின் பாலசோர், பத்ரக், கட்டாக், ஜகத்சிங்பூர், கேந்திரப்பாரா மற்றும் பூரி ஆகிய மாவட்டங்களில் நிறுவப்பட்டு நேரடியாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகத்தால் (Special Relief Commissioner) கட்டுப்படுத்தப்படும்.
இந்த திட்டம் உலக வங்கியின் உதவியுடன் தேசிய சூறாவளி ஆபத்து தணிக்கும் திட்டத்தின் (National Cyclone Risk Mitigation Project) கீழ் நிறைவேற்றப்படும்.