TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மண் அமைப்பு வரைபடம்

August 29 , 2026 15 days 140 0
  • தேசிய மண் ஆய்வு மற்றும் நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் பணியகம் (NBSS&LUP) இந்தியாவின் முதல் மண் அமைப்பு வரைபடத்தை உருவாக்கியுள்ளது.
  • இது நாடு முழுவதும் ஹெக்டேர் அளவில் எண்ணிமப்படுத்தப்பட்ட மண் வகைப்பாடு தரவுகளை வழங்குகிறது.
  • இது குறிப்பிட்ட நிலங்களுக்கு சிறந்த பயிர்களை அடையாளம் காண விவசாயிகளுக்கு உதவுகிறது, மேலும் பிராந்தியத்திற்கேற்ற கொள்கைகள், பயிர் திட்டமிடல் மற்றும் நிலப் பயன்பாட்டு உத்திகளுக்கு ஆதரவளிக்கிறது.
  • மண்ணில் உள்ள மணல், வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றின் விகிதத்தைக் கொண்டு மண் அமைப்பு தீர்மானிக்கப்படுகிறது.
  • இந்தியாவின் முதல் மண் ஆழ வரைபடம், மண் அமைப்பு வரைபடத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பே உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
  • மண் ஆழ வரைபடமும் NBSS&LUP நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
  • NBSS&LUP என்பது ICAR-இன் கீழ் உள்ள ஒரு தேசிய நிறுவனம் ஆகும் என்பதோடு இது மகாராஷ்டிராவின் நாக்பூரில் அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்