இந்தியாவின் முதல் மின்னணு பொருட்கள் உற்பத்தி குழுமங்கள்
December 14 , 2017 2927 days 1467 0
இந்தியாவின் முதல் மின்னணு பொருட்கள் தொழிற்சாலை உற்பத்தி குழுமங்கள் (EMC – Electronic Manufacturing Cluster) ஆந்திரப் பிரதேசத்தில் அமைய உள்ளது. இது ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேணிகுண்டாவில் அமைக்கப்பட உள்ளது.
கைபேசி மற்றும் அதன் பயன்பாட்டு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை வழங்குவதற்காக மின்னணு பொருட்கள் உற்பத்தி குழுமங்கள் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன.
ஆந்திரப் பிரதேசத்தில் இத்தகு நாட்டின் முதல் பிரத்யேக மொபைல் மற்றும் மின்னணு உற்பத்தி குழுமம் அமைப்பதற்காக ஸ்ரீ வெங்கடஸ்வரா தனியார் மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் முனையம் எனும் சிறப்பு குறிக்கோள் வாகனம் (SPV – Special Purpose Vehicle) ஒன்று துவங்கப்பட்டு உள்ளது.
இக்குழுமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.