பெண் விமானி சிவாங்கி சிங், இந்தியாவின் முதல் பெண் ரஃபேல் விமானி ஆவார்.
இவர் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் இந்திய விமானப் படை காட்சிப் பீடத்தில் அங்கம் வகித்தார்.
இவர் 2017 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையில் இணைந்தார்.
இந்திய விமானப் படையின் காட்சிப் பீடத்தில் பங்கேற்ற 2வது பெண் விமானியும் இவரே ஆவார்.
இந்திய விமானப் படையின் காட்சிப் பீடத்தில் பங்கேற்ற முதல் பெண் போர் விமானி பாவ்னா காந்த் ஆவார்.
சிவாங்கி சிங் பீகாரில் பிறந்தவர் ஆவார்.
2022 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் கருத்துரு, “எதிர்காலத்திற்கு ஏற்ப மாறி வரும் இந்திய விமானப் படை” (Indian Air Force Transforming for the future) என்பதாகும்.