இந்தியாவின் முதல் லைபர் (LIBOR) மாற்று விகித ஒப்பந்தம்
March 19 , 2021 1642 days 764 0
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை SOFR (Secured Ovenight Financing Rate) விகிதத்துடன் இணைக்கப்பட்ட அயல்நாட்டு வணிகக் கடன் ஒப்பந்தத்தில் (ECB - External Commercial Borrowing) முதன்முறையாக கையெழுத்திட்டுள்ளன.
இது (LIBOR) இலண்டன் வங்கிகளுக்கிடையேயான கடன் விகிதத்திற்கு மாற்றாக அமைகிறது.
LIBOR என்பது பல முக்கிய உலக வங்கிகள், சர்வதேச வங்கிகளுக்கிடையேயான சந்தை அமைப்பில் குறுகிய கால கடன்களைப் பரிமாறி கொள்வதற்கான ஒரு உலகளாவிய வட்டி வீதமாகும்.
குறிப்பு
இது இந்தியாவிலேயே SOFR இணைக்கப்பட்ட முதல் அயல்நாட்டு வணிகக் கடன் ஒப்பந்தமாகும்.