இந்தியாவின் முதல் வணிகரீதியான புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் கூட்டமைப்பு
August 21 , 2026 3 days 53 0
பொது-தனியார் பங்களிப்பு (PPP) மாதிரியின் கீழ் இந்தியாவின் முதல் முழுமையான வணிக ரீதியான உள்நாட்டு புவிக் கண்காணிப்பு (EO) செயற்கைக்கோள் கூட்டமைப்பிற்கு IN-SPACe ஒப்புதல் அளித்துள்ளது.
பிக்சல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான அலைடு ஆர்பிட்ஸ் பிரைவேட் லிமிடெட் கூட்டமைப்பில் துருவா ஸ்பேஸ், பியர்சைட் ஸ்பேஸ் மற்றும் சாட்சூர் அனலிட்டிக்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அடங்கும்.
இந்தக் கூட்டமைப்பு 2029 ஆம் ஆண்டிற்குள் 12 செயற்கைக்கோள்களை உருவாக்கி இயக்குவதற்கு ₹1,200 கோடிக்கு மேல் முதலீடு செய்யும்.
இந்தச் செயற்கைக்கோள்கள் பான்குரோமாடிக், மல்டிஸ்பெக்ட்ரல், ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் மற்றும் செயற்கை துளை ரேடார் (SAR) படங்களை வழங்கும்.
அனைத்து செயற்கைக் கோள்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, இந்திய ஏவூர்திகள் மூலம் விண்ணில் செலுத்தப்படும்.