தேசியப் பண்டக மற்றும் வகையீட்டுப் பரிமாற்ற நிறுவனம் (NCDEX) ஆனது இந்தியாவின் முதல் வானிலை வகையீடுகளைத் தொடங்குவதற்கு இந்திய வானிலையியல் துறையுடன் (IMD) ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சந்தை அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்தி பருவநிலை தொடர்பான சில அபாயங்களை நிர்வகிக்க உதவுவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இந்த வானிலை வகையீடுகளானது IMD-ன் வரலாற்று மற்றும் நிகழ்நேர தரவுத் தொகுப்புகளிலிருந்து மழைப் பொழிவு மற்றும் இதர பிற வானிலைத் தரவுகளின் அடிப்படையில் இருக்கும்.
இது காலநிலைக்கு மிகவும் ஏற்றவாறு கிராமப்புற பொருளாதாரத்தை உருவாக்கவும், வருமான ஏற்ற இறக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.