TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் வாஷ் (WASH) சமூகப் பத்திரம்

October 10 , 2026 12 hrs 0 min 33 0
  • நப்கிசான் ஃபைனான்ஸ் லிமிடெட் (NABKISAN Finance Limited) நிறுவனமானது தண்ணீர், சுகாதாரம் மற்றும் தூய்மை (WASH) துறைக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் சமூகப் பத்திரத்தை தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிட்டு உள்ளது.
  • இந்தப் பத்திரம் 180 கோடி ரூபாயைத் திரட்டியதுடன் மேலும் 2031 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதிர்ச்சியடைகிறது.
  • இந்த நிதி கிராமப்புற மற்றும் பின்தங்கிய சமூகங்களில் பாதுகாப்பான குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும்.
  • இப்பத்திரம் CRISIL AAA (நிலையானது) மற்றும் CARE AAA (நிலையானது) கடன் மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது.
  • நப்கிசான் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனமானது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமாகும்; Water.org தொழில்நுட்ப ஆலோசகராகவும் அறிவுசார் பங்குதாரராகவும் இப்பத்திரத்திற்கு ஆதரவளித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்