TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ஸ்வச் சுஜல் பிரதேசம்

September 22 , 2022 1026 days 679 0
  • அந்தமான் நிக்கோபார் தீவுகளானது இந்தியாவின் முதல் ஸ்வச் சுஜல் பிரதேசமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இதன் மூலம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அனைத்துக் கிராமங்களும் ஹர்கர் ஜல் சான்றிதழைப் பெற்றுள்ளதோடு அது திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமம் உள்ள பிரதேசம் என்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான குடிநீர் விநியோகம் மற்றும் அதன் மேலாண்மை என்பது சுஜல் மற்றும் ஸ்வச்சின் ஒரு முக்கிய அம்சமாகும்.
  • மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அனைத்துக் கிராமப்புற குடும்பங்களுக்கும் 100% குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டது.
  • கோவா மற்றும் தெலுங்கானாவிற்குப் பிறகு கிராமப்புறக் குடும்பங்களுக்கு 100% குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிய நாட்டின் மூன்றாவது மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்