இந்தியாவின் முதல் ஹைபர்லூப் திட்டம் - ஆந்திரப்பிரதேசத்தில்
September 8 , 2017 2791 days 1015 0
ஆந்திரப்பிரதேசத்தில் விஜயவாடாவையும் அமராவதியையும் இணைக்கும் இந்தியாவின் முதல் ஹைபர்லூப் திட்டம் வரவிருக்கிறது. இத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக ஆந்திரப்பிரதேச பொருளாதார மேம்பாட்டு குழுவும் ஹைபர்லூப் போக்குவரத்து தொழில்நுட்பங்கள் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டன.
ஹைபர்லூப்
ஹைபர்லூப் என்பது மூடப்பட்ட குழாய்களை உள்ளடக்கியதாகும். இதனுள்ளே விதைப்பை போன்ற அமைப்பு அல்லது காயை மூடியுள்ள அமைப்பு சீரான வேகத்திலும் முடுக்கத்திலும் காற்றின் எதிர்ப்போ அல்லது உராய்வோ அற்ற ஒரு போக்குவரத்து முறையில் மக்களும் பொருட்களும் பயணிப்பதற்கு உதவும்.