தெலுங்கானா மாநிலமானது, ஐதராபாத்தில் உள்ள ஜீனோம் பள்ளத்தாக்கில் 1 Bio எனப்படுகின்ற இந்தியாவின் முதல் ஒற்றை-பயன்பாட்டு உயிரிச் செயல்முறை வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தினைத் தொடங்கியது.
1 Bio என்பது, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவப்பட்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முழுமையான செயல்முறை மேம்பாடு மற்றும் சோதனை அளவிலான சரி பார்ப்பை வழங்குகிறது.
இந்த மையத்தில் 500 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட உயிரி உலை, மேம்பட்ட மேல்நிலை மற்றும் கீழ்நிலை அமைப்புகள், பகுப்பாய்வு ஆய்வகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளன.
தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக் நிறுவனத்துடன் இணைந்து, சுமார் 90 கோடி ரூபாய் முதலீட்டில் ஓர் உயிரி செயல்முறை வடிவமைப்பு மையம் உருவாக்கப்பட்டது.
இந்தத் துவக்கம் ஆனது ஜீனோம் பள்ளத்தாக்கின் 25ம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்பதோடு2030 ஆம் ஆண்டிற்குள் உயிரின அறிவியலில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் தெலுங்கானாவின் இலக்கையும் ஆதரிக்கிறது.