இந்தியாவின் முதல் ‘லாவெண்டர் திருவிழா'
June 1 , 2022
1161 days
667
- இந்திய நாட்டின் முதல் ‘லாவெண்டர் திருவிழா’ ஜம்முவின் பதேர்வா நகரில் தொடங்கப் பட்டது.
- லாவெண்டர் சாகுபடியானது, இந்த மலைப்பாங்கானப் பகுதியின் பொருளாதாரத்தை மாற்றியமைத்துள்ளது.
- தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வா நகரானது இந்தியாவில் ஊதா புரட்சித் தொடங்கப் பட்ட பிறப்பிடமாகும்.
- ‘நறுமணப் பொருட்கள் திட்டம் அல்லது ஊதாப் புரட்சியின்' கீழான லாவெண்டர் சாகுபடி ஜம்மு காஷ்மீரில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது.
- இந்த ஒன்றியப் பிரதேசத்தின் விவசாயிகள் சமூகத்தின் வாழ்க்கையை மாற்றும் நோக்கில் இது மத்திய அரசினால் தொடங்கப்பட்ட முன்னெடுப்பாகும்.

Post Views:
667