இந்தியாவின் முன்னணி சூரியகாந்தி எண்ணெய் வழங்கீட்டு நாடு
November 5 , 2025 16 hrs 0 min 53 0
ரஷ்யா, இந்தியாவின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் வழங்கீட்டு நாடாக உக்ரைனை முந்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் சுமார் 175,000 டன்னிலிருந்து 2024 ஆம் ஆண்டில் 2.09 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளதுடன், ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி கடந்த நான்கு ஆண்டுகளில் பன்னிரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில், 2021 ஆம் ஆண்டில் சுமார் 10 சதவீதமாக இருந்த ரஷ்ய சூரியகாந்தி எண்ணெயின் பங்கு 2024 ஆம் ஆண்டில் 56% ஆக அதிகரித்துள்ளது.
சூரியகாந்தி எண்ணெய் ஆனது இந்தியாவில் அதிகம் நுகரப்படும் சமையல் எண்ணெயில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதோடு அதில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.
விலை உயர்வு காரணமாக 2025 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 13% குறையக் கூடும் என்றாலும், ரஷ்யாவின் பங்கு 55-60% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.