இந்தியாவின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்- ஷஃபிகுர் ரஹ்மான் பார்க்
March 2 , 2024 515 days 412 0
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் சம்பல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஷஃபிகுர் ரஹ்மான் பார்க் சமீபத்தில் காலமானார்.
இவர் இந்தியப் பாராளுமன்றத்தின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பார்க், 2019 ஆம் ஆண்டில் ஐந்தாவது முறையாக சம்பால் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
சமாஜ்வாதி கட்சியில் இருந்த பார்க் முராதாபாத் மக்களவைத் தொகுதியில் மூன்று முறையும் (1996, 1998, மற்றும் 2004) மற்றும் சம்பல் மக்களவைத் தொகுதியில் இரண்டு முறையும் (2009 மற்றும் 2019) வெற்றி பெற்றார்.
அவர் உத்தரப் பிரதேச மாநில அரசாங்கத்தில் ஒரு காபினெட் அமைச்சராகவும் பணி ஆற்றினார் என்பதோடு, சம்பல் தொகுதியில் இருந்து அவர் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.