தேசியப் புள்ளி விவர அலுவலகத்தின் (National Statistical Office) தரவுகளின் படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.9% (-23.9%) என்ற அளவில் சுருங்கியுள்ளது.
இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 26.9 லட்சம் கோடியாக குறைந்துள்ளது, இது கடந்த ஆண்டு இருந்ததை விட 23.9% குறைவு.
பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 38.08 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இருந்ததை விட 22.6% குறைவு.
ஜூன் காலாண்டில் ஏற்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவானது, சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய பொருளாதாரத்தின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிக மோசமான சரிவாகும்.
இது சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட இந்தியாவின் நான்காவது மந்தநிலை மற்றும் தாராளமயமாக்கலுக்குப் பின்னர் ஏற்பட்ட முதல் மந்தநிலை ஆகும்.
பொருளாதாரமானது கடைசியாக 1980 நிதியாண்டில் சுருங்கியது.
இந்தியாவானது 1997-98 ஆம் ஆண்டிலிருந்து காலாண்டு அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சித் தரவை வெளியிடத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட முதல் சரிவு இதுவாகும்.