உத்தரப் பிரதேசத்தில் மதுராவில் உள்ள சுர்முரா கிராமத்தில் இந்தியாவின் யானைகளுக்கான முதல் பல்நோக்கு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது.
இது வைல்ட்லைப் SOS (Wildlife SOS) என்ற நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்நிறுவனம் 2010-ம் ஆண்டில் முதல் யானை பாதுகாப்பு மற்றும் நல மையத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த மருத்துவமனை அந்த யானை பாதுகாப்பு மற்றும் நல மையத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருக்கின்றது.
வேர்ல்ட்லைப் SOS என்பது இயற்கைப் பாதுகாப்புத் துறையில் உள்ள ஒரு இலாப நோக்கம் சாராத அமைப்பாகும்.
இது 1995 ஆம் ஆண்டு இந்தியாவின் இயற்கையான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகவும் நாட்டில் இடர்பாடுகளில் உள்ள வனவுயிர்களை மீட்டு அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்கும் முதன்மையான நோக்கத்திற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது.