இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகள் – ஜனவரி 2026
February 27 , 2026 125 days 228 0
Centre for Research on Energy and Clean Air (CREA) வெளியிட்ட தரவுகளின்படி, 2026 ஜனவரியில் ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருட்களை வாங்குவதில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகத் தொடர்கிறது.
இந்தியா €2.2 பில்லியன் ($2.59 பில்லியன்) மதிப்புள்ள ரஷ்ய எரிபொருட்களை இறக்குமதி செய்தது என்பதோடு இந்தமொத்தக் கொள்முதலில் 78% கச்சா எண்ணெய் ஆகும்.
ஜனவரி 2026 இல் இந்தியா ஒரு நாளைக்கு சுமார் 1.2 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்தது.
ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்ப் பொருட்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை ஜனவரி 21, 2026 முதல் அமலுக்கு வந்தது.
தடைகள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், இந்தியாவின் எரிசக்தி துறையில் ரஷ்யா தொடர்ந்து ஒரு முக்கிய வழங்குநராக இருந்ததுஅதே நேரத்தில் அதே காலக் கட்டத்தில் ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களின் மிகப்பெரிய வாங்கும் நாடாக சீனா இடம் பிடித்தது.