ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பாதுகாப்புச் செலவினங்களை வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் $92.1 பில்லியன் ராணுவச் செலவினத்துடன் இந்தியா உலகளவில் 5வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில் இது 2024 ஆம் ஆண்டை விட 8.9% அதிகமாகும்.
அதிகரித்த செயல்பாட்டுச் செலவுகள், அதிகரித்த ராணுவக் கொள்முதல் மற்றும் 2025-இல் பாகிஸ்தானுடனான பதற்றங்கள் ஆகியவை இந்த செலவின அதிகரிப்புக்குக் காரணமாகும்.
இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 2.3% ஐ பாதுகாப்பிற்காகச் செலவிட்டுள்ள அதே சமயம் பாகிஸ்தான் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.9% ஐ செலவிட்டுள்ளது.
உலகளாவிய ராணுவச் செலவினம் 2025-ஆம் ஆண்டில் சாதனை அளவாக $2,887 பில்லியனை எட்டியதுடன் இது தொடர்ந்து 11-வது ஆண்டாக ராணுவச் செலவினம் அதிகரிப்பதைக் குறிக்கிறது.
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளே அதிகமாக செலவு செய்யும் நாடுகளாகும், இவற்றுடன் இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் இணைந்து, உலகளாவிய மொத்தச் செலவினத்தில் சுமார் 58% பங்கைக் கொண்டுள்ளன.