இந்தியாவின் வனப்பகுதிகளுக்கு வெளியே மரங்கள் வளர்ப்பு திட்டம்
October 30 , 2022 1064 days 533 0
அசாம் அரசு மற்றும் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமை (USAID) ஆகியவை இணைந்து இந்தியாவின் வனப்பகுதிகளுக்கு வெளியே மரங்கள் வளர்ப்பு திட்டத்தினை (TOFI) தொடங்கியுள்ளன.
இது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பாரம்பரிய வனப்பகுதிகளுக்கு வெளியே மரங்களின் பரவலை விரிவுபடுத்துகிறது.
சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளுடன் உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்தை ஒருங்கிணைப்பதற்காக நவீன முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மாநிலத்தில் வேளாண் காடு வளர்ப்பின் பாரம்பரிய நடைமுறையை மேம்படுத்துவதற்கும் மதிப்பிடுவதற்கும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.