இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 61 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்து 6.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்தது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 15.5% அதிகரித்து 74 பில்லியன் டாலராகவும், மொத்த இறக்குமதி 0.6% குறைந்து சுமார் 80.6 பில்லியன் டாலராகவும் இருந்தது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தினை விடவும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்ததை விடவும் அதிகமாக இருந்தது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தங்க இறக்குமதி கிட்டத்தட்ட 60% குறைந்து 4 பில்லியன் டாலராக இருந்தது.
சேவைகள் ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 12% அதிகரித்து 38.5 பில்லியன் டாலராகவும், சேவைகள் இறக்குமதி சுமார் 8.1% அதிகரித்து 18.6 பில்லியன் டாலராகவும் இருந்தது.