இந்தியாவின் வறுமை நிலை குறித்தப் புள்ளி விவரங்கள் (2011-2023)
April 30 , 2025 113 days 198 0
உலக வங்கியின் தரவுகளின்படி, 2011-12 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப் பட்ட பத்தாண்டுகளில் இந்தியா 171 மில்லியன் மக்களை மிகவும் தீவிரமான வறுமை நிலையிலிருந்து மீட்டுள்ளது.
The World Bank's Spring 2025 Poverty and Equity Brief என்பது இதனைச் சுட்டிக் காட்டுகிறது.
2011-12 ஆம் ஆண்டில் 16.2 சதவீதமாக இருந்த தீவிர வறுமை நிலை (ஒரு நாளைக்கு 2.15 டாலருக்கும் குறைவாக வருமானத்தில் வாழ்தல்) ஆனது, 2022-23 ஆம் ஆண்டில் 2.3 சதவீதமாகக் குறைந்தது.
கிராமப்புறங்களில் நிலவும் தீவிர வறுமை நிலையானது 18.4 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் நிலவும் தீவிர வறுமை நிலை 10.7 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாகவும் குறைந்தது.
இந்தியா கிராமப்புற-நகர்ப்புற இடைவெளியை ஆண்டிற்கு சுமார் 16 சதவீத அளவில் குறைத்து 7.7 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதப் புள்ளிகள் குறைத்தள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 3.65 டாலர் என்ற குறைவான நடுத்தர வருமானம் கொண்ட பிரிவிற்கான வறுமைக் கோட்டு வரம்பின் படி, வறுமை நிலையானது சுமார் 61.8 சதவீதத்திலிருந்து சுமார் 28.1 சதவீதமாகக் குறைந்து, சுமார் 378 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது.
இந்தியாவின் ஐந்து மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை 2011-12 ஆம் ஆண்டில் நாட்டின் தீவிர ஏழ்மை நிலையில் சுமார் 65 சதவீதப் பங்கைக் கொண்டிருந்தன.
2022-23 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்தத் தீவிர வறுமைக் குறைப்பில் மூன்றில் இரண்டு பங்கை அவைக் கொண்டிருந்தன.
இந்த மாநிலங்களில் இன்றும் இந்தியாவின் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சுமார் 54 சதவீதத்தினரும் (2022-23) பல பரிமாண ஏழ்மை நிலையில் உள்ள 51 சதவீதத்தினரும் (2019-21) வாழ்கின்றனர்.