2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வாழ்வாதார நிலை குறித்த அறிக்கையானது, கடந்த ஏழு ஆண்டுகளில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை மேம்படுத்தச் செய்வதற்காக மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட நிதிகளில் வெறும் 1 முதல் 5% மட்டுமே அவைகளைச் சென்றடைந்துள்ளதாக கூறுகிறது.
அணுகல் மேம்பாட்டுச் சேவை (Access Development Services) எனும் தேசிய வாழ்வாதார ஆதரவு அமைப்பானது இந்த அறிக்கையைத் தயார் செய்துள்ளது.
சமீபத்தியக் காலங்களில் அதிகளவில் தொடங்கப்பட்ட அமைப்புகள் என்பதனால், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Companies) குறித்து மட்டுமே (2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவானவை) இந்த அறிக்கை பகுப்பாய்வு செய்துள்ளது.
கூட்டுறவு அமைப்பாகவோ (அ) சமுதாய அமைப்புகளாகவோ பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும்.