TNPSC Thervupettagam

இந்தியாவின் விண்வெளி சாதனை

September 15 , 2025 7 days 74 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆனது 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி விண்வெளி ஆய்வில் ஒன்பது முக்கிய உலக சாதனைகளைப் படைத்துள்ளது.
  • எதிர் வரும் ஆண்டுகளில் இந்தியா எட்டு முதல் பத்து உலக சாதனைகளை அடையும் பாதையில் உள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில், செவ்வாய் கிரக சுற்றுக் கல ஏவல் திட்டமானது இந்தியாவை தனது முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் நாடாக மாற்றியது.
  • 2017 ஆம் ஆண்டில், துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம் (PSLV-C37) அதன் ஒரே பயணத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி, உலகளாவிய சாதனையைப் படைத்தது.
  • 2019 ஆம் ஆண்டில், சந்திரயான்-2 உலகின் சிறந்த சந்திரச் சுற்றுக் கல ஒளிப்படக் கருவியை சந்திரனுக்குக் கொண்டு சென்றது.
  • 2023 ஆம் ஆண்டில், சந்திரயான்-3 இந்தியாவை சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக மாற்றியது.
  • 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், கிரையோஜெனிக் (மீக்குளிர் நிலையிலான) நிலை எஞ்சின் மேம்பாட்டில் இந்தியா மூன்று உலகளாவிய சாதனைகளை படைத்தது.
  • ஏவு வாகனம் மார்க்-3 (LVM3) அதன் முதல் கிரையோஜெனிக் ஏவுதலை காலத்தை உலகளவில் கணக்கிடும் போது வேகமாக, வெறும் 28 மாதங்களில் அடைந்தது.
  • 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியா 4,000க்கும் மேற்பட்ட ஏவு வாகனங்களையும் 133 செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவியுள்ளது.
  • இஸ்ரோ அதன் நீண்டகால திட்டங்களின் ஒரு பகுதியாக 2040 ஆம் ஆண்டிற்குள் சந்திரனில் ஒரு மனிதனைத் தரையிறக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்