TNPSC Thervupettagam

இந்தியாவின் விமானப் போக்குவரத்து தொலைநோக்குக் கொள்கை 2047

November 2 , 2025 2 days 35 0
  • இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையானது உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக மாறியுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கையானது 2025 ஆம் ஆண்டில் 163 ஆக அதிகரித்துள்ளது என்ற நிலையில் மேலும் 2047 ஆம் ஆண்டில் 350 முதல் 400 வரையிலான எண்ணிக்கையினை எட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • உதே தேஷ் கா ஆம் நாக்ரிக் (உடான்) திட்டம் ஆனது, 3.23 லட்சம் விமானங்களை இயக்கியுள்ளது என்பதோடு மேலும் 1.56 கோடிக்கும் மேற்பட்டப் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
  • பிராந்திய இணைப்புத் திட்டம் (RCS)–UDAN திட்டத்தின் கீழ், 2 நீர் நிலை சார் விமான நிலையங்கள் மற்றும் 15 ஹெலிகாப்டர் நிலையங்கள் உட்பட 649 வழித்தடங்கள் மற்றும் 93 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
  • 2040 ஆம் ஆண்டிற்குள், பயணிகள் போக்குவரத்து 1.1 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்ற நிலைமையில், விமானத் துறையில் மொத்த வேலை வாய்ப்பு சுமார் 25 மில்லியனாக உயரக் கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்