இந்தியாவின் விமானப் போக்குவரத்து தொலைநோக்குக் கொள்கை 2047
November 2 , 2025 10 days 82 0
இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையானது உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக மாறியுள்ளது.
2014 ஆம் ஆண்டில் 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கையானது 2025 ஆம் ஆண்டில் 163 ஆக அதிகரித்துள்ளது என்ற நிலையில்மேலும் 2047 ஆம் ஆண்டில் 350 முதல் 400 வரையிலான எண்ணிக்கையினை எட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
உதே தேஷ் கா ஆம் நாக்ரிக் (உடான்) திட்டம் ஆனது, 3.23 லட்சம் விமானங்களை இயக்கியுள்ளது என்பதோடு மேலும் 1.56 கோடிக்கும் மேற்பட்டப் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
பிராந்திய இணைப்புத் திட்டம் (RCS)–UDAN திட்டத்தின் கீழ், 2 நீர் நிலை சார் விமான நிலையங்கள் மற்றும் 15 ஹெலிகாப்டர் நிலையங்கள் உட்பட 649 வழித்தடங்கள் மற்றும் 93 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
2040 ஆம் ஆண்டிற்குள், பயணிகள் போக்குவரத்து 1.1 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்ற நிலைமையில், விமானத் துறையில் மொத்த வேலை வாய்ப்பு சுமார் 25 மில்லியனாக உயரக் கூடும்.