மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் தற்பொழுது கூடுதல் செயலாளராக பணியாற்றி வரும் தின்கர் அஸ்தானா (IFS : 1990) லாவோஸ் மக்கள் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் தற்பொழுது கூடுதல் செயலாளராக பணியாற்றி வரும் கடாம் தர்மேந்திரா (IFS: 1990) ஈரான் இசுலாமியக் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹனோயின் துணைத் திட்டத் தலைவரான திருமதி நினா ஷெரிங் காங்கோ மக்களாட்சிக் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புது தில்லியில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வரும் சஞ்சய் குமார் வர்மா ஜப்பானில் இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.