TNPSC Thervupettagam

இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை வீதம்

February 8 , 2022 1419 days 642 0
  • இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையமானது வேலை வாய்ப்பின்மை குறித்த ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை வீதம் 6.57% ஆக உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. 
  • இது 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான ஒரு மிகக்குறைவான வீதமாகும்.
  • நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 8.16% ஆக இருந்தது.
  • இது கிராமப்புறங்களில் 5.84% ஆக இருந்தது.
  • 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டிலிருந்த வேலை வாய்ப்பின்மை வீதம் 7.91% ஆகும்.
  • இது நகர்ப்புறங்களில் 9.3% ஆகவும் கிராமப்புறங்களில் 7.28% ஆகவும் இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தெலுங்கானா மாநிலத்தில் குறைவான வேலை வாய்ப்பின்மை பதிவாகியுள்ளது.
  • ஹரியானா மாநிலத்தில் அதிக வேலைவாய்ப்பின்மை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்